மதுராந்தகம்: மயக்க மாத்திரை கொடுத்து பெண்ணிடம் செயின் பறித்து தலைமறைவான
பாதிரியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.விழுப்புரம் மாவட்டம்
திருக்கோவிலூர் ஏனாதிமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.
இறந்துவிட்டார். இவரது மனைவி கீதா (34). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார்
கம்பெனியில் பணியாற்றுகிறார். கீதாவுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு
வந்துள்ளது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் வேலையை முடித்துவிட்டு கீதா நடந்து வந்துள்ளார். அப்போது, பேரணி கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கலியமூர்த்தி என்ற ஐசக்(45) என்பவர் அந்த வழியாக பைக்கில் வந்துள்ளார். அவரிடம் லிப்ட் கேட்ட கீதாவை பைக்கில் ஏற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது தனது உடல் நிலை பற்றி கலியமூர்த்தியிடம் கூறியுள்ளார்.
‘நெஞ்சுவலி போக்க மேல்மருவத்தூரில் எனக்கு தெரிந்த டாக்டர் இருக்கிறார். அவர் தருகின்ற மருந்து, மாத்திரையை சாப்பிட்டு வந்தால் நோய் தீர்ந்துவிடும்ÕÕ என்று கலியமூர்த்தி கூறியுள்ளார். இதை நம்பி, கீதா, மகன் பாலகிருஷ்ணனுடன் சில நாளுக்கு முன்மேல்மருவத்தூர் சென்றிருக்கிறார். அவர்களை சந்தித்த கலியமூர்த்தி, முதலில் இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என கீதாவுக்கும் அவரது மகனுக்கும் கொடுத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட இருவரும் மயங்கி விழுந்தனர். கொஞ்ச நேரம் கழித்து கீதாவுக்கு மயக்கம் தெளிந்து எழுந்தபோது தான் அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை. இதனால் கீதா கதறினார்.
இதுபற்றி, மேல்மருவத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று இரவு கலியமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, பேரணி கிராமத்தில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக இருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து செயினை பறிமுதல் செய்தனர். பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக