புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்த
பள்ளி குழந்தைகள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேரின்
உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் இருந்து இன்று காலை 12 மாணவர்களை
தனியார் வாகனம் ஒன்று வல்லத்திராக்கோட்டை அரசுப் பள்ளிக்கு ஏற்றிச்
சென்றது. அந்த வாகனம் அறந்தாங்கி சாலையில் வளநாடு என்ற இடத்தில் சென்ற போது
தனியார் பேருந்து ஒன்று திடீரென அதன் மீது மோதியதுடன் மேலே ஏறி இறங்கியது.
அப்படியே அப்பளம் போல் நொறுங்கிய தனியார் வாகனத்தில் இருந்த 12 பள்ளிக்
குழந்தைகளில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து
உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பள்ளிக் குழந்தைகளில் மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற 3 பள்ளிக் குழந்தைகள்
தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும்
அவர்களது உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
வாகன விபத்தில் 9 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக