சென்னை:"சட்டப்படியான வயது நிரம்பிய ஆணும், பெண்ணும்,
உடல் ரீதியாக
தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.
ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது. தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும். அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக