சென்னை: பெப்சி உமா புகாரின் பேரில் ஜெயா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரை
போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். ஜெயா டிவிய¤ல் ஆல்பம் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக பெப்சி உமா இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் மதுரையை சேர்ந்த சங்கர நாகராஜ். இவர் மீது பெப்சி உமா கிண்டி மகளிர் போலீசில் நேற்று இரவு புகார் செய்தார். அதில், Ôநிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கர நாகராஜ் என்னை தகாத வார்த்தையில் திட்டி, பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி உள்ளார். இது பற்றி ஜெயா டிவி நிர்வாகத்தில் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சங்கர நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று கூறி உள்ளார். மகளிர் போலீசார் சங்கர நாகராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரை நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக