ஞாயிறு, 16 ஜூன், 2013

டாப்ஸி: முயற்சியை விட அதிர்ஷ்டம்தான் முக்கியம்.

ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. தற்போது
அஜீத்துடன் வலை படத்தில் நடிக்கிறார். டாப்ஸி அளித்த பேட்டி வருமாறு:- நான் சாப்ட்வேர் என்ஜினீயர். ஆனால் வேலைக்கு போக விருப்பமில்லை. நடிக்க வாய்ப்பு வந்ததால் நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு நடித்து முன்னுக்கு வருவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. முயற்சியை விட அதிர்ஷ்டம்தான் முக்கியம். தமிழ், தெலுங்கு, இந்தியில் எனக்கு திறமையான இயக்குனர்கள் கிடைத்தனர். அதனால் ஈசியாக வளர முடிந்தது. இந்தி சினிமாவிலும் நடித்துள்ளேன். இதனால் இந்தியில் மட்டுமே நடிக்க விரும்பவில்லை. எனக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்இந்திய திரையுலகில் வலுவான இடம் உள்ளது. எனவே தென்இந்திய மொழி படங்களிலேயே தொடர்ந்து நடிப்பேன். எல்லா வயது நடிகர்களிடமும் நட்பு உள்ளது. அஜீத் முதல் ஆர்யா வரை யாருடனும் என்னை இணைத்து பேசவில்லை. குடும்பத்தினர் என்னை நம்புகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தியில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் அமைந்தன. இதனால் நடிப்பு திறமையை காட்ட முடிந்தது. ஒவ்வொரு கேரக்டரிலும் என் திறமையை நிரூபித்து உள்ளேன். இது சந்தோஷத்தை கொடுக்கிறது. கவர்ச்சி பதுமையாக என்னை நினைப்பது பற்றியெல்லாம் கவலை இல்லை.


அஜீத், ஆர்யாவுடன் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். நயன்தாராவும் இப்படத்தில் இருக்கிறார். அஜீத் படம் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் பத்திரிகையாளராக வருகிறேன். தென்இந்திய மொழி படங்களில் நடிகர்களை கொண்டாடுகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை. நடிகைகளுக்கும் சமமான மரியாதை தருகிறார்.

இங்கிருந்து இந்திக்கு போய் நடிகைகள் ஜெயிக்கின்றனர். ஆனால் இந்தியில் இருந்து வந்து நடிகர்களால் இங்கு நிலைக்க முடியாது. மும்பையில் சொந்தமாக வீடு வாங்க ஆசை உள்ளது. நான் ஹிருத்திக்ரோஷன் ரசிகை. மார்க்கெட் இருப்பது வரை நடிப்பேன். அதன்பிறகு சொந்தமாக தொழில் தொடங்குவேன்.

இவ்வாறு டாப்ஸி கூறினார்

கருத்துகள் இல்லை: