புதன், 19 ஜூன், 2013

தலிபான்களுடன் அமெரிக்க பேசுவதற்கு ஆப்கான் பெண் எம் பிக்கள் கடும் எதிருப்பு

Fawzia Koofi, MP for Badakhshan afghanistan
“How many women really make their voices heard? I can count them on my fingers”: Fawzia Koofi, MP for Badakhshan, who plans to stand as a presidential candidate in 2014. Photograph: Farzana Wahidy for the Observer
தலிபான்கள் தங்களது பயங்கரவாத கோட்பாடுகள் எதனையும் கைவிடவில்லை. அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை நிறுத்தவில்லை ஜனநாயகத்தை ஏற்றுகொள்ளவில்லை , பழைய காட்டு மிராண்டி ஆட்சியை தொடர்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்
காபூல்: தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகி வருவதால் அதிருப்தியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அரசு, அமெரிக்காவுடனான
பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது. 2014ம் ஆண்டுடன் அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு மேலும் அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்க வகை செய்யும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திடீரென முடிவு செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தானை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலிபான்களால் கடும் பிரச்சினைகளையும், சவால்களையும், தீவிரவாத தாக்குதல்களையும் தினந்தோறும் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்கா, தலிபான்களுடன் பேசுவதை ஆப்கானிஸ்தான் விரும்பவில்லை. இதையடுத்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது ஆப்கானிஸ்தான். இதுதொடர்பாக அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கர்ஸாயின் செய்தித் தொடர்பாளர் அய்மால் பைசி தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பான ஆயத்தப் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானை கடும் அதிருப்தியில் தள்ளியுள்ளது. குறிப்பாக அதிபர் கர்ஸாய் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால்தான் பேச்சுவார்த்தையை நிறுத்தும் முடிவை அவர் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: