சனி, 22 ஜூன், 2013

ரஜினி ஷங்கர் கூட்டணி! மீண்டும் Fantasy மசாலா தயாரிப்பில் ?


ரஜினி கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸிலும், ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தின் மேக்கிங்கிலும் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றனர். ரஜினி ஷங்கர் இணைந்த சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனைகளைப் படைத்தன.எந்திரன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தான் ஜப்பானில் ரிலீஸாகி வசூலை அள்ளியது. இந்நிலையில் ஷங்கர் சமீபத்தில் ரஜினியிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், கதையைக் கேட்ட ரஜினியும் ஓகே சோல்லிவிட்டார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.ஷங்கரின் ஐ திரைப்படம் கடைசிகட்ட ஷூட்டிங்கில் இருப்பதாலும், ரஜினி அடுத்ததாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகாததாலும் இவர்களது மூன்றாவது கூட்டணிக்கு ஏன் வாய்ப்பில்லை என்று கேள்வி எழுப்புகிறது தமிழ்த்திரையுலகம். Fantasy

கருத்துகள் இல்லை: