வியாழன், 18 அக்டோபர், 2012

செக்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட IPL சியர் லீடர்.. ஏஜென்ட்டுடன் கைது!

புனே: ஐபிஎல் அணி ஒன்றின் சியர் லீடர் எனப்படும் நடனப் பெண் ஒருவர் செக்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். அவருக்கு விபச்சாரத்தில் உதவிய ஏஜென்ட்டையும் போலீஸார் தூக்கியுள்ளனர்.
அந்தப் பெண் எந்த ஐபிஎல் அணியைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாலிவுட் நட்சத்திரம் ஒருவருக்குச் சொந்தமான அணிக்காக இவர் சியர் லீடராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக அந்தப் பெண் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது ஷில்பா ஷெட்டியைத் தலைவராகக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெண்ணாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
புனேவில் வைத்து இந்தப் பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவரது பெயர் சானா மனிஷ் சிரவலா. 22 வயதாகிறது. ஐபிஎல் போட்டிகளில் சியர் லீடர் குரூப்பில் இடம் பெற்று ஆடியுள்ளார்.

இவரை புனேவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து நேற்று மாலை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவியாக இருந்த ஏஜென்ட் சீமா ஜக்தாப் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு நாளைக்கு ஒருவருக்கு உல்லாசம் தர சானா ரூ. 1.5 லட்சம் பணம் வசூலித்துள்ளாராம். இதில் ஹோட்டல் அறை வாடகை உள்ளிட்டவை சேராதாம். அது தனிக் கணக்காம்.
சீமா மும்பையிலிருந்தபடி செயல்பட்டு வந்துள்ளார். அவர்தான் ஆட்களைப் பிடித்து புனேவுக்கு அனுப்பி வைப்பாராம்

கருத்துகள் இல்லை: