புதன், 17 அக்டோபர், 2012

சமீரா ரெட்டி: பெரிய படத்தில் மட்டும் ஒரு பாட்டுக்கு Dance

சமீரா ரெட்டி சென்னை: பெரிய படத்தில் மட்டுமே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன் என்றார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இப்போது தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. இந்த நேரத்தில் சக்ரவியூ இந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு சமீரா டான்ஸ் ஆடியுள்ளார். இதை பற்றி அறிந்ததும் சில தென்னிந்திய இயக்குனர்கள் தங்கள் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட சம¦ராவை கேட்டிருக்கிறார்கள். ஆனால் சமீரா மறுத்துவிட்டாராம். இது பற்றி சமீரா ரெட்டி கூறியதாவது: சக்ரவியூ படம் பிரபல இயக்குனரான பிரகாஷ் ஜாவின் படம். அவரது படத்தில் ஒன்று அல்லது இரண்டு பாடல்தான் இடம்பெறும்.


அரசியல் கதைகளை மட்டுமே அவர் உருவாக்குவதால் பட காட்சிகள் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும். அந்த நேரத்தில் ரசிகர்களை ரிலாக்ஸ்படுத்த பாடல் காட்சியை புகுத்துவார். அப்படி இடம்பெறும் பாடலின்போது ரசிகர்கள் யாரும் வெளியே எழுந்து போகமாட்டார்கள். எனவேதான் அவர் ஒரு பாட்டுக்கு ஆட கேட்டதும் சம்மதித்தேன். அது கவர்ச்சியான பாடல் காட்சிதான். அந்த பாடல் காட்சியில் எனது போஸ் பார்த்துவிட்டு பலர் அதுபோல் ஒரு பாட்டுக்கு ஆட கேட்கிறார்கள். பெரிய ஹீரோ அல்லது பெரிய இயக்குனர் சம்பந்தப்பட்ட பெரிய படமாக இருந்தால் மட்டுமே அதுபோல் நடிப்பேன். இல்லாவிட்டால் நோ கால்ஷீட். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

கருத்துகள் இல்லை: