திங்கள், 15 அக்டோபர், 2012

கலைஞர்: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்?

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்த நிலையிலும் மின் உற்பத்தியை தொடங்காதது குறித்து அதிமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மிழகத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்வெட்டு தீரும் என்று மின்துறை அமைச்சர் பேசியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்த்து தமிழகத்தை மின்மிகு  மாநிலமாக ஆக்கிக் காட்டுவேன் என்று வாக்காளர்களை ஜெயல-தா நம்பவைத்தார். இப்போது மின்துறை அமைச்சர் அடுத்த ஜூன் மாதம் வரை அதாவது ஆட்சிக்கு வந்து 25 மாதங்கள் கழிந்த பின்னர்தான் மின்வெட்டு தீரும் என்று பேசியுள்ளார். திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் 600 மெகாவாட் அலகு, வடசென்னை இரண்டாவது அலகு, வள்ளூர் ஆகியவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு, மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டதற்குப் பிறகும் மின்சார உற்பத்தியை ஆரம்பிக்காமல் தாமதம் ஏற்படுத்துவதற்கான காரணம் என்ன?  
இந்த கேள்விகளுக்கெல்லாம் அதிமுக ஆட்சியாளர்கள் ஒளிவு மறைவின்றி விடைகான வேண்டும்.
மின்தடையால் சமையலுக்கு மசாலா அரைக்க முடியவில்லை, குழந்தைங்க தூக்கமே போச்சு போன்ற புலம்பல்கள் மத்தியில், வேறு சில தர்மசங்கடமான பிரச்சனைகளும் பெண்களுக்கு உருவாகியுள்ளன.விருதுநகர் பெட்ரோல் நிலையத்தில் திடீரென்று ஏற்பட்ட மின்தடையால், கணவர் என்று நினைத்து ஒரு பெண் மற்றொரு நபருடன் ஜோடி மாறி மோட்டார் சைக்கிளில் பயணிக்க நேர்ந்த அவலத்தையும், மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போ-ருக்கே என்று அங்கிருந்தவர்கள் புலம்பியதையும் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன

கருத்துகள் இல்லை: