சனி, 20 அக்டோபர், 2012

Kingfisher ஏர்லைன்ஸ் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது!

டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கி சீரான சேவையை வழங்காத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான உரிமத்தை விமானப் போக்குவரத்து ஆணையம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ7,524 கோடி கடன் பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத அந்த நிறுவனம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரு விமானத்தைக் கூட இயக்கவில்லை. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஆணையம் அண்மையில் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஒரு நோட்டீஸையும் அனுப்பியிருந்தது. ஆனால் கிங்பிஷர் நிறுவனம் கொடுத்த பதிலில் திருப்தி ஏற்படாததால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: