திங்கள், 15 அக்டோபர், 2012

குர்ஷித் ராஜினாமா செய்யும்வரை கெஜ்ரிவால் ஓயமாட்டார்

 Congress Is Involved With Khurshid சல்மான் குர்ஷித்தை விடுவதாக இல்லை கெஜ்ரிவால்... சிறப்பு விசாரணை நடத்த கோரிக்கை

டெல்லி: அறக்கட்டளை மோசடி புகாரில் சிக்கியிருக்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பதவியிலிருந்து விரட்டாமல் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் ஓயப் போவதில்லை போல்...
சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டளையானது போலியான ஆவணங்கள் மூலம் அரசு நிதியை மோசடியாக பெற்றிருக்கிறது என்பது கெஜ்ரிவால் புகார். இதை சல்மான் குர்ஷித் மறுத்து வருகிறார். தாங்கள் மற்றுத்திறனாளிகளுக்காகத்தான் நிதியைப் பெற்றோம் என்று விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கெஜ்ரிவால் விடுவதாக இல்லை.
இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், சல்மான் குர்ஷித் அறக்கட்டளையின் நிதியைப் பெற்றவரில் ஒருவர் ஒரு சிறுகுறைபாடு கொண்டவர் இல்லை.. மேலும் பலர் எங்கே இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை.
சல்மான் குர்ஷித், மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம் நடத்துவதாகக் காட்டுவது 2010-ம் ஆண்டு புகைப்படங்கள். நாங்கள் குற்றம்சாட்டுவது 2009-10ம் ஆண்டுக்கான நிதியில் நடந்த மோசடி பற்றித்தான். ,முலாயம்சிங் யாதவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து காப்பாற்றப் போராடுகிறவர் குர்ஷித் என்பதால் அவரை உத்தரப்பிரதேச மாநில அரசு பாதுகாக்கிறது. இந்த நிதி மோசடியில் காங்கிரசுக்கும் தொடர்பிருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
குர்ஷித் ராஜினாமா செய்யும்வரை கெஜ்ரிவால் ஓயமாட்டார் போல

கருத்துகள் இல்லை: