திங்கள், 15 அக்டோபர், 2012

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் பார்ப்பனர்கள் செல்வாக்கும் அதிகாரமும்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம்:
ஆதிக்க சக்திகளை எதிர்த்து உரிமையை மீட்க வேண்டும்
தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்
 அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் சட்டம் உச்சநீதிமன் றத்தில் முடக்கப்பட் டுள்ளது. அதிலிருந்து விடுவித்து உரிமை களை மீட்க வேண்டும் என்று தி.மு.க. தலை வர் கலைஞர் அவர் கள் இன்று முரசொலி யில் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
உடன்பிறப்பே,
தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் செயல் படுத்தப்படாமல் முடங் கிக் கிடக்கிறது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு சுட்டிக்காட்டியுள்ளதை;  தமிழாக்கம் செய்து11-10-2012அன்றுவிடுதலை நாளேட்டில் வெளி யிட்டிருக்கிறார்கள்;  அதுகுறித்துத் தலை யங்கமும் தீட்டியிருக் கிறார்கள்.
தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்த தனது தோழர்கள் வந்து வழிபடும் உள்ளூர் தற்காலிகக் கோயில் ஒன்றில் நித்திய சடங்கு களைச் செய்து கொண் டும், மெழுகுவர்த்தி களை விற்றுக் கொண் டும், அக்கோவில் அறங் காவலர்களான கேச வனது தந்தையும் தாத் தாவும் இருந்து வந்தனர். அவர்களின் சாதி எது வாக இருந்தாலும், அதனைப் பற்றிக் கவ லைப்படாமல் அனைத்து சாதி இந் துக்களையும் கோவில் அர்ச்சகர்களாக ஆக்கு வதற்கான பயிற்சியை அளிக்க,   தமிழ்நாடு அரசு முன்வந்தபோது கேச வன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண் டார்.  இதற்கான நீண்ட ஓராண்டுப் பயிற்சி முடித்து நான்கு ஆண்டு கள் கடந்தும் கேசவ னும், அவரைப் போன்ற தாழ்த்தப்பட்ட பிரி வைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற 250 பேரும், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர் சிலர் இது பற்றி வழக்குத் தொடுத் திருப்பதால், அர்ச்சகர் வேலை இதுவரை கிடைக்காமல் காத் திருக்கின்றனர்.  இத் தகைய நீண்டகாலத் தாமதமே இந்திய சமூகத் தில் பார்ப்பனர்கள் கொண்டிருக்கும் செல் வாக்கையும் அதிகாரத் தையும் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
  கோயில் வழிபாடுகளையும், மந்திரங்களையும் சமஸ் கிருதத்தில் செய்யாமல், மாநிலத் தாய்மொழி யான தமிழிலேயே செய்ய வேண்டுமென்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர்கள் விரும்புவது பாரம் பரியப் பிடிவாதம் கொண்ட பார்ப்பனர் களை மேலும் பதறச் செய்கிறது. - என்று அமெரிக்க ஏடு வெளி யிட்டுள்ளதை, படித்த போது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் கள் ஆவதற்கு கழக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அந்த முயற் சிகளுக்கு ஏற்பட்ட விளைவுகள் ஆகிய நிகழ் வுகளைச் சுற்றி எனது நினைவு சுழல ஆரம் பித்தது.
பெரியாரின் கிளர்ச்சி யும் - திமுக ஆட்சியில் சட்ட நிறைவேற்றமும்
1970ஆம் ஆண்டு, அப்போது கழகம் ஆட் சியில்;  தமிழக முதல மைச்சராக நான்.  அந்த ஆண்டு ஜனவரித் திங்கள், தந்தை பெரியார் அவர் கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார்கள்.  ஆல யங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகு பாடு இன்றி அனை வரும் சென்று ஆண்ட வனைத் தொழுதிட வேண்டும் என்றும், அனைவருக்கும் சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்துவதற்காக அந்தக் கிளர்ச்சி நடை பெறும் என்று பெரியார் போர்முரசு கொட்டி னார். அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலே,  பெரியார் அவர்களின் விருப் பத்தை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் இயற்றப்படும் என்று உறுதியளித்து நான், தந்தை பெரியார் அவர் களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
அந்த வேண்டு கோளில், குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்ச கராக வேண்டுமென்று யாரும் இந்த நூற் றாண்டில் வாதாடு வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று, மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கை வலுப் பெற்று வரும் இந் நாளில், அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண் ணத்தை யாரும் முரட் டுப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்க மாட் டார்கள். அர்ச்சகர் களுக்கென ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும்.  அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை.  அப்படிப் பயிற்சி பெறுகிறவர் கள் எந்த வகுப்பினராக இருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். இந்த நல்ல நிலை ஏற்பட - ஆலயங்களில்   ஆண்ட வன் முன்னே, சாதியின் பெயரால், மற்றவர் களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன் றிட,  விதிமுறைகள் செய் திட அரசு முன் வரு கிறது என்ற உறுதி மொழியினை ஏற்று,  பெரியார் அவர்கள், திட்டமிட்டிருந்த கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று நான் குறிப் பிட்டிருந்ததை ஏற்றுக் கொண்டு,  தந்தை பெரியார் அவர்கள், அவர் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார்.
பெரியார் அவர்களுக்கு நான் கொடுத்த உறுதிமொழியினை நிறைவேற்றிடும் வகையில், தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் ஆலோசனையையும் பெற்று, 2-12-1970 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப் பட்டது. அர்ச்சகர் தேர் வில் வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெருமகனும் கர்ப்பக்கிரகத்தில் நுழைந்து ஆண்ட வனைப் பூஜை செய்ய லாம் என்ற உரிமையை வழங்கும் அந்த சட்டத்தைப் புரட்சிகரமான சட்டமென சமத்துவம் விரும்பும் சான்றோர் அனைவரும் பாராட் டினர்.
உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சனாதனிகள்
ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங் காவலர்களில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என் பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி;  எந்தவொரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசின்அர்ச்சகர் சட்டம் கண்டு வெகுண்ட சமத்துவம் விரும்பாத சனாதனிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் 1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு.  மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம்,மதசம்பந்தமான நடவடிக்கைகளிலோ, விவகாரங்களிலோ தலையிட வில்லை.  எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லுபடி யானதே என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும்; அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வரமுடியாதஅளவுக்கு முடக்கப்பட்டு விட்டன. அதுநடைமுறைக்கு வரவேண்டுமென்றால், அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப் பட வேண்டும்.
இளவல் வீரமணியின் தலையங்கம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், எனது இளவல் கி. வீரமணி அவர்கள், விடுதலையில் அறுவை சிகிச்சை வெற்றி - ஆனால் நோயாளி மரணம் என்று தலைப்பிட்டு அருமையான தலையங்கம் ஒன்றினைத் தீட்டியிருந்தார்.
கழக அரசின் சார்பில், நாம் எவ்வளவோ முயன்றும், அரசியல் சட்டத்தில் தக்க திருத்தம் கொண்டுவரப்படவே இல்லை என்பதைக் கண்டு கொதிப்படைந்த தந்தை பெரியார் அவர்கள், 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்தப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.  ஆனால்  அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே, 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்துவிட்டார்கள். அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருந்தநிலையில், அதன் காரணமாகத் தந்தை பெரியார் நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் மறைந்தார்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்!
2006ஆம் ஆண்டு கழக அரசு அமைந்த உடன், தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்திருந்த அந்த முள்ளை அகற்றும் பணியில் ஈடுபட்டது.  சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, தகுதியும் திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோயில்களில் அர்ச்சக ராகலாம் என  23-5-2006 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  அதனையடுத்து,  பழனி, திருச் செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும்;  சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும் தொடங்கப்பட்டன. இப்பயிற்சி நிலையங் களில் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன இலவசமாகஅளிக்கப்பட்டன.ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.  ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்  சேர்ந்த 55 மாண வர்கள்,  இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உள்பட மொத்தம் 207 மாணவர்கள் ஓராண்டு கால இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றனர்.
2006ஆம் ஆண்டு கழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு, அது உச்சநீதிமன்றம் வரை சென்றது.  வழக்கை விரைவுபடுத்திட கழக அரசின் சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக தமிழகத் திருக் கோயில்களில் முறைப்படி நியமனம் செய்து பணி ஆணையை விரைந்து வழங்க இயலாமல் போய்விட்டது.
ஆதிக்க சக்திகள் விரிக்கும் வலை!
இவ்வாறு அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கர்கள் ஆவதற்கு உருவாக்கப்பட்ட சட்டச் சிக்கல்களைக் களைந்து, பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி, ஆரம்ப நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேதான்; 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்கள் வந்தன.  தேர்தல்கள் நடைபெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு,  அதைப் பற்றி யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை;  யாருக்காக கழக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டதோ அவர்களும் அது குறித்துக் கவலைப்படுவதாகத் தகவல் இல்லை.  ஆதிக்க சக்திகள் விரிக்கும் வலையை அறுத்து அப்பாவி மக்களை  மீட்க நாம் கடுமையாக முயற்சிப்பதும்;  அதிகாரம் கைமாறியதும், ஆதிக்க சக்திகளின் மாயவலையில் அவர்கள் மாட்டிக் கொண்டு வதைபடுவதும்;  தொடர்கதையாக நீண்டு நம் நெஞ்சைத் துளைக்கிறது!
அன்புள்ள,
மு.க.

கருத்துகள் இல்லை: