வெள்ளி, 19 அக்டோபர், 2012

தமிழ் சினிமாவுக்கு 400 கோடிக்கு மேல் நஷ்டம் இந்த ஆண்டு இதுவரை

எதிர்ப்பார்ப்பு டாப்... ரிசல்ட் ப்ளாப்!!
தமிழ் சினிமாவுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூ 400 கோடி வரை நஷ்டமாகியிருப்பதாக புலம்புகிறார்கள் திரைத்துறையினர்.
பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளறிவிட்ட எந்தப் படமும் ஓடாமல் ஏமாற்றியதே இதற்குக் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே...
இந்த ஆண்டின் முக்கால் பகுதியைத் தாண்டிவிட்டோம். 120 படங்களுக்கும் மேல் வெளியாகிவிட்டது. இதில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி ஏமாற்றிய 6 படங்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

பில்லா 2

இந்த லிஸ்டில் முதலிடம், அஜீத்தின் பில்லா 2-படத்துக்குத்தான். அஜீத் ஒருவர்தான் இந்தப் படத்தில் தெரிந்த முகம்.மற்றவர்களெல்லாம் வட இந்திய முகம் அல்லது புதுமுகம். ஆனாலும் இதுவரை எந்த அஜீத் படத்துக்கும் கிடைக்காத பெரும் எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்துக்கு நிலவியது. ஓபனிங்கும் பிரமாதமாகத்தான் இருந்தது. ஆனால் ரசிகர்கள் மற்றும் வர்த்தகர்களை திருப்தி செய்யாத படமாக மாறிவிட்டது

கொலவெறி 3

கொலவெறி என்ற ஒரு பாட்டை வைத்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பரபரப்பேற்படுத்திய படம் தனுஷ் நடித்த 3. அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பே படத்துக்கு எதிர்மறையாகத் திரும்பி பதம் பார்த்துவிட்டது. பெரும் நஷ்டம் (வாங்கியவர்களுக்குத்தான்.. தயாரிப்பாளருக்கல்ல!). இதை ஈடுகட்ட 'எதிர்நீச்சல்' எடுத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்!

அரவான்

ஒரு பெரிய கமர்ஷியல் படமாகவே புரமோட் செய்யப்பட்ட, பல கோடிகள் விழுங்கிய வசந்தபாலனின் அரவானுக்கும் மெகா ப்ளாப் பட்டியலில் தாராள இடமுண்டு. தரம், கதை நேர்த்தி, திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு என பல மட்டங்களிலும் சொதப்பிய படம் இது.

முகமூடி

மிஷ்கின் இயக்கிய 'எளிய சூப்பர் மேன்' படமான முகமூடி, ஓரளவு வசூலித்ததாக கூறப்பட்டாலும், இந்த ஆண்டின் தோல்விப் படங்களில் இதுவும் ஒன்றுதான். இந்தத் தோல்விக்கு தயாரிப்பாளர் இயக்குநருக்குத் தந்த தொல்லைகள் மற்றும் நெருக்கடிகளும் முக்கிய காரணம் என்கிறார்கள். எனிஹவ்... அது தனி கட்டுரைக்கான சமாச்சாரம்!

தாண்டவம்

ஒரே வரியில் தண்டம் என்ற விமர்சனத்துக்குள்ளான படம் இது. விக்ரமின் சினிமா எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள இந்தப் படத்துக்காக நடந்த கதை சண்டைகள், சர்ச்சைகள் நாடறிந்தது. இந்த மாதிரி சர்ச்சைகளில் சிக்கும் படம் பெரும்பாலும் உருப்பட்டதில்லை என்பதை மீண்டும் நிரூபித்த படம்!
 Posted by:

கருத்துகள் இல்லை: