புதன், 17 அக்டோபர், 2012

டைரக்டர் விஜய், இதுவரை சொந்தக் கதையில் படம் பண்ணியதில்லை

டைரக்டர் விஜய் நடிகர் விஜய் அடுத்த படம்! “ஜிங்கு ஜிங்கு ராம்பாபு ஓகே ஓகே” அல்லது, “ஒரு செட் பூரி”

Viruvirupu

விஜய் அன்டு விஜய் காம்பினேஷன் செய்திதான், தற்போது குழப்பச் செய்தி. ‘டைரக்டர் விஜய் நடிப்பில் நடிகர் விஜய் நடிக்கிறார்’ என்ற செய்தி, தா.மு., ஹிட் நியூஸ். அதாவது, தாண்டவத்துக்கு முன்!
டைரக்டர் விஜய் இயக்கிய தாண்டவம் திரைக்கு வந்து கோரத் தாண்டவம் ஆடி, விக்ரமை வேரோடு சாய்த்துவிட்டு போனது. அத்துடன், நடிகர் விஜய், பழைய ஐடியாவையே விட்டுவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால், அந்த புராஜெக்ட் இன்னமும் உயிருடன் இருக்கிறதாம்.
இது என்ன மாயம்.. என்று ஒரு பகுதி வியக்க, மறுபகுதிக்கு இதன் மர்மம் தெரிகிறது.
டைரக்டர் விஜய்க்கு உதவி டைரக்டர்களாக பல ஹாலிவூட் டைரக்டர்கள் உள்ளார்கள் என்பது ஒன்றும் புதிய தகவல் அல்ல. உதவி டைரக்டர்கள் என்றால், அவர்கள் நேரடியாக இவருக்கு கீழ் பணிபுரிவதில்லை. இது லாங்-டிஸ்ட்டன்ஸ் ரிலேஷன்ஷிப். அவர்கள் ஹாலிவூட்டில் படம் எடுத்து டி.வி.டி.யில் இவருக்கு அனுப்பி வைப்பார்கள். இவர் அதை இங்கே ரீ-ஷூட் செய்து வெளியிடுவார்.
நடிகர் விஜய், தமது அடுத்த படத்துக்கு இப்படியான ஆசாமி ஒருவர் போதுமென்று இருக்கிறாராம். காரணம், வேறு இடத்தில் இருக்கிறார் மெயின் டைரக்டர். அவர் பெயர், பூரி ஜெகந்நாத்.
கொஞ்ச நாட்களாக பாய்விரித்து படுத்திருந்த நடிகர் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய ‘போக்கிரி’ படத்தின் மெயின் டைரக்டர் இந்த பூரி ஜெகந்நாத். வரும் 18 ந் தேதி இதே பூரி ஜெகந்தாத் இயக்கி புதிய படம் ஒன்று ரிலீசாகப் போகிறது ஆந்திராவில்.

‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ என்பதுதான் படத்தின் பெயர். ராம்பாபு கேரக்டரில் பவன் கல்யாண், கங்கா கேரக்டரில் தமன்னா நடிக்கும் பக்கா ஜிங்குஜிங்கு மசாலா படம் இது. கடந்த மார்ச்சில் வந்திருக்க வேண்டிய படம், தயாரிப்பாளர், டைரக்டர் முறுகலால் இம்மாதம் 18-ம் தேதிதான் ரிலீஸ்!
இதைத்தான் உருவ திட்டமிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நம்ம டைரக்டர் விஜய், இதுவரை சொந்தக் கதையில் படம் பண்ணியதில்லை என்பது இன்டஸ்ட்ரி டாக். மற்றையவர்கள் கதை அவுட்லைனை உருவினால், இவர் காட்சிகளை மட்டுமல்ல, காட்சியில் ஹீரோயின் தலையில் கட்டியிருந்த ரிப்பனைகூட அப்படியே தமிழ்ப் படுத்தக்கூடிய வல்லவர்.
அதனால்தான், இந்த ஆளே போதும் என்பது, நடிகர் விஜய்யின் கணிப்பு.
“18ம் தேதி பூரி ஜெகந்தாத் படம் வரட்டும், அதுவரை ரெண்டு செட் பூரி சாப்பிட்டுவிட்டு வாருங்கள்” என்று டைரக்டரை அனுப்பி வைத்திருக்கிறார், நடிகர்.
ஜிங்குஜிங்கு ராம்பாபு கவிழ்ந்தால்தான், வேறு ஆளை தேட வேண்டியிருக்கும்!

கருத்துகள் இல்லை: