திங்கள், 15 அக்டோபர், 2012

விஜயகாந்த்: இனி அ.தி.மு.க.,வுக்கு இறங்குமுகம் தான்.

தே.மு.தி.க. 8-வது ஆண்டு தொடக்கவிழா 14.10.2012 மாலை நடந்தது.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவது தான், தே.மு.தி.க.,வின் பணி. தமிழக மீனவர்கள், கண்ணீர் வடிக்க காரணம் கச்சத்தீவை தாரை வார்த்தது தான். எங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் போது, முதல் வேலையே, கச்சத்தீவை மீட்பது தான்.
பவர் கட் செய்யும் அ.தி.மு.க., வின் பவரை கட் செய்ய மக்கள் தயாராகி விட்டனர். இனி அ.தி.மு.க.,வுக்கு இறங்குமுகம் தான். முதல் சறுக்கல், ஜனாதிபதி தேர்தலிலும், இரண்டாவது சறுக்கல், துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஏற்பட்டது. இலவசங்களை நிறுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளில், பதவியேற்பு விழா நடத்தியே காலம் சென்று கொண்டிருக்கிறது.


சங்கரன்கோவிலில் சவால் விட்ட ஜெயலலிதா, ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும். அவர் வெற்றி பெற்றால், நாங்களே பாராட்டு விழா நடத்துவோம் என்றார்.

கருத்துகள் இல்லை: