செவ்வாய், 16 அக்டோபர், 2012

Midnight’s Children பட விழாவில் Shreya, சல்மான் ருஷ்டி


லண்டனில் நடந்த பட விழாவுக்கு நடிகை ஷிரியாவுடன் போய் நின்று அனைவரது பார்வையையும் ஷிரியா மீது விழ வைத்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
இந்தியாவில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் நூல் மூலம் ஈரான் மதத் தலைவர் கொமேனியின் கடும் கோபத்துக்கு உள்ளாகி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். எப்போதோ இங்கிலாந்தில் செட்டிலாகி விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் 1981ம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படம் லண்டனில் தொடங்கியுள்ள 56வது பிஎப்ஐ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இந்தப் பட விழாவுக்கு தன்னுடன் படத்தின் நாயகியான ஷிரியாவையும் உடன் அழைத்து வந்திருந்தார் ருஷ்டி. இதனால் பட விழாவுக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் ஷிரியா மீதுதான் விழுந்து எழுந்தன. இந்தியப் பாரம்பரிய முறையிலான சேலையை படு ஸ்டைலாக அணிந்து வந்து அத்தனை பேரையும் ஈர்த்து விட்டார் ஷிரியா.

அவர் கட்டியிருந்த பிங்க் மற்றும் தங்க நிற பார்டருடன் கூடிய பச்சை நிற சேலையில் அப்படியே அப்சரஸ் மாதிரி காட்சியளித்தார் : ஷிரியா" h ஷிரியா">ஷிரியா. இந்தப் படத்தை தீபா மேத்தா இயக்கியுள்ளார். அவரும் விழாவுக்கு வந்திருந்தார்.
இந்தப் படம் பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டிருப்பதால் இப்படத்தை இந்தியாவில் திரையிட யாருமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: