இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சியில் சீனாவின் உதவியை
இலங்கை அரசு கோரியிருப்பதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக சீன அரசுடனும்,
நிபுணர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அவசரகால நிவாரண
சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பலாங்கொட, கொகல்ல
கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே
அமைச்சர் சீனா உதவியுடன் செயற்கை மழை வரவுள்ளது பற்றி தெரிவித்தார்.
“தீவிரவாதத்தை மட்டுமல்ல, வரட்சி போன்ற இயற்கையின் சவால்களையும்
முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.யுடன்சீன அரசுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும், சீன நிபுணர்கள் குழு ஒன்று இலங்கையின் வரட்சியான பகுதிகளில் தங்கியிருந்து, செயற்கை மழைக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்யவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலேயே வரட்சி அதிகமுள்ள பகுதி, தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் உள்பட வட மாகாணம்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக