புதன், 17 அக்டோபர், 2012

பெரியாரின் தாக்கம் துளிகூட இல்லாத வைகோ

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

http://mathimaran.wordpress.com/

‘திராவிட இயக்கம் தமிழகத்தை கெடுத்துவிட்டது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிற தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் போன்றோர் இணைந்த கைகளோடு வைகோ வை ஆதரிக்கிறார்கள், அவர் நூல் வெளியிட்டு விழாவில்  வைகோ கட்சிக்காரர்களே வெட்கப்படும் அளவிற்கு அவரை புகழ்ந்து…!

வைகோ வை இவர்கள் திராவிட இயக்கத் தலைவராக பார்க்கிறார்களா? இல்லை ‘திராவிட இயகத்தில் இருக்கிற கருணாநிதி எதிர்ப்பாளர்’ என்கிற அளவில் புழங்குகிறார்களா? புரியவில்லை. சரி இதுஒருபுறம் இருக்கட்டும

சமீபத்தில், பாரதிராஜாவின் திராவிட இயக்க எதிர்ப்பு பேச்சுக்கு சீறிய வைகோ; தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் இவர்களின் மிக மோசமான முழுநேர திராவிட இயக்க எதிர்ப்பு குறித்து ஏன் மவுனம் காக்கிறார்?
குறிப்பாக காங்கிரஸ் மனோபாவம் கொண்ட, தமிழருவி மணியன் போன்ற தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை தன்னுடைய தோழமையாக வைகோ கருதுவது ஏன்? திராவிட இயக்க எதிர்ப்பை ‘கருணாநிதி வெறுப்பாக’ மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதாலா? அல்லது தன்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று மிகுந்த தைரியத்தோடு, “2016 இல் வைகோ தமிழக முதல்வர் ஆவார்”  என்று சொன்ன தமிழருவி மணியனின் துணிச்சலா? நெடுமாறன், தமிழருவி மணியன், மணியரசன் போன்ற திராவிட இயக்க எதிர்ப்பாரளர்களின் கேள்விகளுக்கு அல்லது அவதூறுகளுக்கு திராவிட இயக்கத் தலைவர் என்கிற முறையில்  வைகோவின் பதில் என்ன? அல்லது கண்டனம் எங்கே?< திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான மணியரசன், நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றவர்கள் வைகோவை புகழ்வதும், வைகோ இவர்களை  புகழ்வதற்குமான மர்மம் என்ன? பெரியாரையே கடுமையாக எதிர்க்கிற மணியரசன்; வைகோவை மாபெரும் தலைவராக பார்ப்பதின் ரகசியம் என்ன? பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என்பது பெயரளிவில் கூட வைகோவிடம் இல்லை என்பதினாலா? பெரியாரின் தாக்கம் துளிகூட இல்லாத அல்லது வாய் தவறிகூட இந்து மதம் குறித்தோ, பார்ப்பனர்கள் குறித்தோ தவறாக எதுவும் பேசிவிடக்கூடாது என்று ஒரு கம்பீரமான கட்டுபாடோடு, உறுதியான உள்ளத்தோடு வாழ்கிற வைகோவின் வீரமா?
வைகோவிடம் இருக்கிற எந்த அம்சம், இந்த திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை இப்படி கவர்ந்திருக்கிறது?
‘திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் – திராவிட இயக்க தலைவர் வைகோ’ இவர்களின் உயிருக்கு உயிரான ‘கொள்கை’ ரீதியான நட்பை,
தமிழக தமிழர்கள் அங்கிகரிக்கீறார்களா?
இல்லை வெளிநாட்டு தமிழர்கள் தீர்மானிக்கிறார்களா?
என்னவா இருக்கும்…?
ஒண்ணுமே புரியல.. உலகத்துல..
என்னமோ நடக்குது..
மர்மமா.. இருக்குது..

கருத்துகள் இல்லை: