திங்கள், 15 அக்டோபர், 2012

ZeeTamilTV சொல்வதெல்லாம் உண்மை'..புது அவதாரம் மக்கள் ரிப்போர்ட்டர்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் பார்வையாளர்களையும் பங்கேற்கவைக்கும் வகையில் மக்கள் ரிப்போர்ட்டர் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.
கணவனை சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பெரும் பங்குண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி இதற்காக பஞ்சாயத்து செய்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சி இப்போது அடுத்த கட்டத்திற்கு தயாராகிறது. பார்வையாளர்களும் பங்கேற்கும் வகையில் `மக்கள் ரிப்போர்ட்டர்` என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பார்வையாளர்களை மக்கள் ரிப்போர்ட்டர்களாக ஆக்குவதே இதன் திட்டம்.

இதில் இணைய விரும்புகிறவர்கள் அடுத்து வரும் ஒரு மாத நிகழ்ச்சியை ஊன்றிக் கவனித்து அதற்கான விமர்சனங்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம். ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் `சொல்வதெல்லாம் உண்மை குழுவினர்' குறிப்பிட்ட நகரத்திற்கு நேரடியாகச் சென்று நிகழ்ச்சிகள் கேள்விகளைக் கேட்பார்கள். அப்போது சரியான பதில்களை கூறுவோர், இந்த மக்கள் ரிப்போர்ட்டர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
டிஆர்பியை அதிகமாக்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?

கருத்துகள் இல்லை: