வெள்ளி, 19 அக்டோபர், 2012

வீடுகளில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பேனல்கள்: மத்திய அரசு பரிசீலனை


மின்பற்றாக் குறையை போக்க வீட்டு கூரைகளின் மேல் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல்களை அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து மத்திய மின்சாரா துறை அதிகாரிகள் கூறியதாவது:- சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வந் துள்ளது. இதற்காக வீடுகளின் கூரை களில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்கும் வீட்டு உரிமையாளர் களுக்கு நிதி மானியம் மற்றும் கடன் உதவி செய்து அதன் மூலம் கருவியை பொருத்திக்கொள்வது, அத்துடன் வீடுகளுக்கு தேவைக்கு போக மீதம் உள்ள மின்சாரத்தை பகல் பொழுதில் மின்சார வாரியமே வாங்கி கொள்ளும் வகையிலும் திட்டத்தை பொதுமக்க ளிடம் கொண்டு செல்ல மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் மின்வெட்டை தவிர்க்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வீட்டு உரிமையாளர்கள் எளிதாக தங்கள் வீட்டு கூரையில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல்களை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது தங்கள் வீட்டு கூரைகளை முதலீட் டாளர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
12ஆவது அய்ந்தாண்டு திட்டம்
வோல்டாயிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. 12ஆவது அய்ந்தாண்டு திட்டத்தின் கீழ் (2012-2017) 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற் காக ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக் கப்பட்டு நாடு முழுவதும் 61 இடங் களில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக் கும் கண்காணிப்பு அலகுகள் (மய் யங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மய்யங்கள் மூலம் மத்திய அரசு கதிர்வீச்சுகளை அளவிட்டு வருகிறது. அத்துடன் திட்டத்தை ஊக்குவிப்பதற் காக பல்வேறு நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருப்பது போன்று சூரியஒளி மூலம் 3,000 மற்றும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மய்யங்கள் போன்று, பிற மாநிலங்களும் கடைப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு தேவையான மின்சாரம் போக எஞ்சிய மின்சாரத்தை மின்சார வாரியத்திற்கு விற்பனையும் செய்யலாம். ஜெர்மனி உள்பட பல்வேறு அய்ரோப்பிய நாடு களும் இதனை கடைப்பிடிக்கின்றன.
ஆரம்பகட்டத்தில் உள்ள இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு தற்போதைய மின்சார சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்குவது, வீடுகளில் பெறப்படும் மின்சாரத்திற்குரிய கட்டணம் செலுத் தும் முறை போன்ற பல்வேறு கருத் துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முதன் முறையாக வீட்டு கூரைகளில் சூரிய ஒளி மின்சார பேனல் அமைக்க டெல்லி அரசு திட்ட மிட்டு அமல்படுத்தியுள்ளது. அத் துடன் வீடுகளிலிருந்து மின்சாரம் வாங் குவதற்கான ஒப்பந்தங்களும் போடப் பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: