செவ்வாய், 16 அக்டோபர், 2012

மாற்றான். 20 நிமிஷங்களை கட் செய்த கல்பாத்தி அகோரம் K.V.ஆனந்த் கோபம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இருவேடங்களில் நடித்து நேற்று(12.10.12) வெளிவந்த மாற்றான் படம் ரசிகர்களிடமிருந்து பலவகை விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் குறையாக பல ரசிகர்கள் பொதுவாக சொல்லும் குறை படத்தின் நீளம் தான். இந்நிலையில்''புட்டேஜ் அதிகமாக இருக்கு, 20 நிமிஷ படத்தை, கட்பண்ணிக்கொடுங்க'' என 'மாற்றான்' டிஸ்டிரிபியூட்டர்களும் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திடம் கோரிக்கை வைக்க, அகோரம் டைரக்டர் கே.வி.ஆனந்திடம் கோரிக்கை வைக்க பிடிவாதமாக மறுத்துவிட்ட ஆனந்த் (12.10.2012) செல்ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம். 
வேறுவழி இல்லாமல் படம் ரிலீசான நேற்று நள்ளிரவு படத்தின் எடிட்டரை கூப்பிட்டு அகோரமே கட் பண்ணிவிட்டாராம். டென்ஷனான ஆனந்த் டைரக்டர் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டப்போகிறாராம்.

கருத்துகள் இல்லை: