உடுமலைப்பேட்டை அருகே 6ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில்
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து
விட்டதாக பெரும் அதிர்ச்சி தரும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள்
பேரதிர்ச்சியுடன் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில்
குதித்தனர்.
அனைத்துப் பெற்றோரையும் மனம் பதை பதைக்க வைத்திருக்கிறது
இந்த உடுமலைப்பேட்டை சம்பவம். உடுமலைப்பேட்டை அருகே உள்ளது
பெருமாள்புதூர். அங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 6ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் சிலர் சேர்ந்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோரும், பிற மாணவியரின் பெற்றோர்களும் பள்ளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக