வியாழன், 18 அக்டோபர், 2012

96 வயது தாத்தா குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் மனைவி வயது 54

96 வயதிலும் 'நாட் அவுட்' ஆகாத தாத்தா: அண்டை வீட்டார் பொறாமை

ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் 96 வயதான தாத்தா ஒருவர் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இதன்மூலம் உலகின் வயதான தந்தை என்ற சாதனையை அடைந்துள்ளார்.
ராம்ஜித் ராகவ் என்ற அந்த தாத்தாவிற்கும் 54 வயதான அவருடைய மனைவி சகுந்தாலாவிற்கும் ஹரியானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தைக்கு தந்தையானது குறித்து கருத்து கூறியுள்ள இந்த தாத்தா, நான் ஒரு விவசாயி, வயதான காலத்தில் எனக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. இதற்கு நான் என்ன செய்வது, குழந்தை என்பது கடவுளாக கொடுக்கும் வரம். அதை நான் எப்படி வேண்டாம் என்று எப்படி தடுப்பது என்று கேட்டுள்ளார்.

இப்பொழுதும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். தாம்பத்ய உறவில் உற்சாகமாக ஈடுபடுகிறேன் என்று வெட்கம் கலந்த சிரிப்போடு கூறியுள்ளார் இந்த தாத்தா. இந்த வயதில் நான் ஒரு குழந்தைக்கு தந்தையாகியிருப்பது பக்கத்து வீட்டுக்காரர்களை பொறாமையில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்கள் வந்து இதன் ரகசியத்து கூறுமாறு என்னை நச்சரிக்கின்றனர். ஆனால் நான் கடவுளைத்தான் கை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார் அந்த தாத்தா. கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு ஈடுபட்டால் எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இந்த தாத்தா அட்வைஸ் கூறியுள்ளார்.
கடந்த 2010 ம் ஆண்டு தனது 94 வது வயதிலும் குழந்தை ஒன்றிற்கு தந்தையானார் ராம்ஜித். இந்நிலையில் 96வது வயதில் குழந்தை ஒன்றிற்கு அப்பாவானதன் மூலம் தனது சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் இந்த தாத்தா. தொடர்ந்து இரண்டு தடவை வயது முதிர்ந்த காலத்தில் அப்பாவான சாதனையை தம் வசப்படுத்தியிருந்தார்,

கருத்துகள் இல்லை: