செவ்வாய், 16 அக்டோபர், 2012

ஈரான், கத்தார், சவுதி அரேபியா சிறைகளில் 72 தமிழக மீனவர்கள்

indian-fishermen
KARACHI: Pakistan on Monday arrested 33 Indian fishermen, weeks after it announced the release of all jailed Indian fishermen as a goodwill gesture, a statement saidதமிழக மீனவர்கள் ஈரான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலே உள்ள சிறைச்சாலைகளில் பல நாட்களாக வாடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன?

ஈரான் நாட்டு அதிகாரிகளால் தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டின் ஒரு தீவிலே உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குக் கூட இது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதைப் போலவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டிலிருந்து கத்தார் நாட்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் துபாயிலிருந்தும், கத்தாரிலிருந்தும் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ஈரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையிலே வைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களைப் பற்றி மட்டுமே இதுவரை அக்கறை செலுத்தி வந்த நாம், இவர்களைப் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.இவ்வாறு சிறையிலே அவதிப்படும் 79 தமிழக மீனவர்களையும் விரைவில் மீட்டு, தமிழகத்திற்கு அனுப்பி வைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதைப்பற்றி தமிழக அரசும் இதுவரை எந்த நடவடிக்கையோ, வேண்டுகோளோ மத்திய அரசுக்கு விடுக்காமல் இருந்தாலும், இனியாவது அவர்களைப் பற்றி அக்கறையோடு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார் .

கருத்துகள் இல்லை: