பின்லேடன் கொல்லப்பட்டபோது சன்னி லியோன் ஆபாச சிடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்''
உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள்.
அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெரிக்கத் தரப்பில் சில தகவல்கள் வெளியிடப்பட்டன. பின்லேடன் வீட்டில் வயாகரா இருந்தது. ஆபாசப் பட வீடியோக்கள் இருந்தன என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்த நிலையில் நம்ம ஊர் ராம்கோபால் வர்மா, இதுவரை யாருமே சொல்லிடாத ஒரு புத்தம் புதிய தகவலை, அதுவும் பரபரப்பான தகவலை கூறி அனைவரையும் திகிலடைய வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள டிவீட்டர் செய்தியில், அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரது வீட்டில் ஏகப்பட்ட சன்னி லியோன் ஆபாசப் பட வீடியோக்கள் சிடி இருந்தது தெரிய வந்தது. மேலும், பின்லேனை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துக் கொன்றபோது கூட அவர் சன்னிலியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தெரிந்த நம்பகமான தகவல் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.
இப்படிப்பட்ட 'அதி' முக்கியமான தகவலை ராம் கோபால் வர்மாவுக்குக் கொடுத்தது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
எது எப்படியோ, நிச்சயம் ராம் கோபால் வர்மாவின் இந்த டிவிட்டர் செய்தி, சன்னி லியோன் மீது மேலும் வெளிச்சம் பாய் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பலாம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக