புதுதில்லி, ஜூலை.11:
கேரளாவில் கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட
பத்மநாபசுவாமி கோயிலை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளத்
தலைவர் சரத்யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
அக்கோயிலின் சொத்துக்களை இந்தியாவில் உள்ள அனைத்து இந்து கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.இந்தியாவில்
உள்ள பணக்கார கோயில்களை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர
வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கோயில்களில் உள்ள சொத்துக்கள்
அனைத்தும் மக்களுக்கு உரியவை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர
வேண்டும் என்றார் அவர்.பத்மநாபசுவாமி கோயில் சொத்துக்கள் குறித்து
பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கோயில் சொத்துக்களின் மதிப்பு
சுமார் 1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக