சாந்திநிகேதன் : விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி,
படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்து, அந்த மாணவியை சிறுநீர்
குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார்
.மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழகக் கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள். இதை அறிந்த விடுதி வார்டன் உமா போடார் ஆத்திரமடைந்து, மறுநாள் மாணவியை அழைத்து வலுக்கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.
இந்தச் சம்பவம் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மாணவியின் தந்தை மனோஜ் மிஸ்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விடுதி வார்டனை கைது செய்தனர். அதேநேரத்தில், விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக, பல்கலை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், மாணவியின் தந்தையும், தாயும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக