படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலமடைந்துவிட்டன. பல லட்சங்கள் கோடிகள் என பணம் செலவு செய்து உலகத்தின் பல மூளைகளிலும் எடுக்கப்படும் படங்கள் 30 முதல் 40 ரூபாய் வரையில் தெருக்களில் கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் மற்ற மொழி படங்களை காப்பி அடித்து தமிழ் சினிமாவில் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
மற்றவர்களின் கதையை திருடி படம் எடுப்பவர்கள் தமிழ் சினிமாவில் கௌரவப்படுத்தப்படுகிறார்களே தவிர புதுவித படங்களை எடுக்கும் திறமையுள்ள படைப்பாளிகளை கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலை மாறினால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும்.
மற்ற மொழி படங்களின் கதைகளை திருடி படமெடுப்பவர்களை கண்டிக்காமல் விட்டால், அடுத்த தலைமுறையும் இதையே பின்பற்றி பாலா, சேரன், லிங்குசாமி போன்ற படைப்பாளிகளை காணாமல் போக செய்துவிடுவார்கள். தமிழ் சினிமா ஆபத்தான நிலையில் உள்ளது” என்று கூறினார்.
ரீமேக் என்பது ரீடேக் அளவிற்கு சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில் தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் இதுபோன்ற செயல்களை எதிர்த்து ஒவ்வொருவராக கொதித்தெழுந்துகொண்டு இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக