சனி, 14 ஜூலை, 2012

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அன்சாரி:


 Ansari Vice Presidential Candidate
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது. டெல்லியில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டது,
குடியாசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை நிறுத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்துவது என முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் , திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் குடியரசு துணைத் தலைவர் தேர்தகில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்துவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
இதனிடையே குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை: