அட கண்றாவியே..திருமணத்துக்குப் பிறகும் படுக்கையறை காட்சியா?' - ரீமா சென் மீது கணவர் கோபம்!
நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.
இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து 'அட கண்றாவியே' என தலையிலடித்துக் கொண்டாராம். அவரது குடும்பத்தினரும் உறவினர்களோடு போய் மருமகளின் 'சீனைப்' பார்த்து அவமானப்பட்டுள்ளனர்.
இதனால் ரீமாசென்-ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கவர்ச்சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமாசென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளாராம்.
இதனை ரீமாவும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறும்போது, "கேங்க்ஸ் ஆப் வசேபூர் 2 படத்தை எனது கணவர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் மனம் புண்பட்டுள்ளார். ஆனாலும் நடிப்பைத் தொடரப் போகிறேன்," என்றார்.
அதானே.. வீட்டுக்காரருக்காகவெல்லாம் படுக்கையறைக் காட்சியில் நடிக்காமல் இருக்க முடியுமா என்ன!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக