தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகிகளாக இருப்பதால் தான் இருவரும் மோதிக்கொள்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி தான் த்ரிஷா-நயன்தாரா ஜோடி. முதலிடம் யாருக்கு என்பதில் போட்டி என்ற கோணத்தில் இருந்த இவர்களின் மோதல் ஹீரோ மோதலாக மாறியது.
அவர்களால் இல்லையென்றும் சொல்ல முடியாத அளவிற்கு ஒருவரை பற்றி ஒருவர் ஓபனாகவே பேட்டி அளித்துக்கொண்டிருந்தனர். திடீரென நயன்தாரா சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணத்திற்கு தயாரானதும் த்ரிஷா-நயன்தாரா சண்டை முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் நினைத்திருந்த போது தன் திருமணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு மறுபடியும் நடிக்க வந்தார் நயன்தாரா.எப்படியும் இவர்கள் மோதல் தொடரும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக கட்டித் தழுவி முத்தம் கொடுத்துக் கொண்டு நட்பு பாராட்டியிருக்கிறார்கள் இந்த நடிகைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நண்பரின் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்த நயன்தாரா அங்கே திரிஷாவை பார்த்ததும்ஆச்சர்யப்பட்டிருக்கிறார்(த்ரிஷா பார்ட்டில இல்லைனா தான் ஆச்சர்யப்படனும்). த்ரிஷா அங்கு இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக மற்றவர்களுடன் உறையாடிக்கொண்டிருந்த நயன்தாராவிடம் த்ரிஷாவாக முன்வந்து பேசியிருக்கிறார். அதன் பின் இருவரும் பிரியவே இல்லையாம். உலகத்தில் உள்ள அனைத்து செய்திகளை பற்றியும் பேசி தீர்த்துவிட்டுத் தான் அங்கிருந்து கிளம்பினார்களாம்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக