புதன், 11 ஜூலை, 2012

மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவன்

சேலத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கொலை செய்த பெண்ணுக்கு ஜாமீன் சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (38). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 21-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் இருந்து லட்சுமியின் மூத்த மகள் சத்தம் போட்டார். இதையடுத்து லட்சுமி அங்கு சென்று பார்த்த போது அவரது கணவர் முருகன் மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி கணவரை போராடி இழுத்தார். மேலும் கத்தியால் வெட்டினார். ஆனாலும் முருகன் மகளிடம் பாலியல் கொடுமையை தொடர்ந்தார். இதனால் ஆவேசம் அடைந்த லட்சுமி தனது கணவரை அடித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

லட்சுமி ஜெயிலுக்கு சென்று விட்டதால் 4 குழந்தைகளும் தவித்தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வக்கீல் மாயன் என்பவர் லட்சுமியை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.


அதன்படி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் லட்சுமிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் லட்சுமிக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: