திருமலை, ஜூலை 10-
திருமலையில் சென் னையைச் சேர்ந்த தம் பதியரின் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்
பட் டது. ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு மண்டபத்தில் தூங்கிய போது நடந்த
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்
தையைத் தேடி வரு கிறார்கள்.
சென்னை அடை யாறு கோட்டூர் தெற்கு கடைசி
தெருவைச் சேர்ந்தவர் ராஜா. கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது
மனைவி தங்கப் பிரியா. இருவரும் தங் கள் குடும்பத்தினர் மற் றும்
உறவினர்களுடன் கடந்தவெள்ளிக் கிழமை சென்னையில் இருந்துதிருப்பதி வந்தனர்.
பின்னர் திருப்பதி யில் இருந்து திருமலை
சென்ற அவர்கள், அங்கு தங்கும் இடம் கிடைக் காததால் தங்கள் பொருட்களை பாது
காப்பு அறையில் வைத்து விட்டு சாமி தரிசனத் துக்கு சென்றனர். அங்கு
ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு சனிக்கிழமை இரவு குடும்பத்தினருடன்
அங்குள்ள அமனிடிஸ் 3ஆவது காம்ப்ளக்சில் படுத்து இருந்தனர்.
அப்போது தங்கள் 11/2 வயது பெண்குழந்தை
காருணிசிறீ மற்றும் 8 மாத ஆண் குழந்தை பிரதித் இருவரையும் அருகில் படுக்க
வைத்திருந்தனர். அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது பிரதித்தை
காணவில்லை. திடீரென காணாமல் போய் விட்டான். அக்கம் பக்கம்
தேடிப்பார்த்தனர், கிடைக்கவில்லை. உடனடியாக அதுபற்றி காவல்துறையில் புகார்
செய்தனர்.
காவல்துறையினரும் விரைந்து வந்து அந்த
பகுதியில் தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். வயர்லெஸ் மூலமும்
மற்றபகுதிகளுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர். நீண்ட நேரம்தேடியும்
குழந்தை கிடைக்கவில்லை. யாரோ அருகில் படுத் திருந்தவர்கள் அல்லது அந்த
ஆசாமிகள் குழந் தையைகடத்திச் சென்று இருக்கலாம் என காவல்துறையினர்
சந்தேகப்படுகிறார்கள்.
இது தொடர்பாக காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வரு கிறார்கள். திருமலை யில் குழந்தை
திருட்டு போன சம்பவம் பக் தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை பற்றி பேசும் போதேதங்கப்பிரி
யாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்து வழிந் தது. அவரது குரலும் குழந்தையை
பிரிந்த சோகத்தில் தழுதழுத் தது பரிதாபமாக இருந் த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக