கட்டுப்படுத்த முடியாதம் தடுமாறும் முதல்வர் அகிலேஷ்
ஆட்சிப் பொறுப்பேற்ற போது ரவுடிகளின் ராஜ்ஜியத்தைக் கட்டுப்படுத்துவேன் என்று அகிலேஷ் யாதவ் உறுதியளித்திருந்தார். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தைக் காட்டிலும் கொலைகளும் கற்பழிப்பு சம்பவங்களும் அதிகரித்துதான் இருக்கின்றன அகிலேஷ் ஆட்சியில் என்று போர்க்கொடி தூக்க தயாராகி வருகின்றன எதிர்க்கட்சிகள்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ்
யாதவ் பொறுப்பேற்ற 3 மாதங்களில் 1146 கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.
ரவுடிகள் ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்த முடியாமல் அகிலேஷ் யாதவ் தடுமாறி
வருகிறார்.
கடந்த ஆண்டில் இதே காலத்தில் 714 கொலைச் சம்பவங்கள்
நடந்திருக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 472
கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டில் 384 கற்பழிப்பு
வழக்குகள் பதிவாகி இருந்தன. இதேபோல் மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மொத்தம்
2001 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டோ 1803
வழக்குகள்தான் பதிவாகி உள்ளன.ஆட்சிப் பொறுப்பேற்ற போது ரவுடிகளின் ராஜ்ஜியத்தைக் கட்டுப்படுத்துவேன் என்று அகிலேஷ் யாதவ் உறுதியளித்திருந்தார். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தைக் காட்டிலும் கொலைகளும் கற்பழிப்பு சம்பவங்களும் அதிகரித்துதான் இருக்கின்றன அகிலேஷ் ஆட்சியில் என்று போர்க்கொடி தூக்க தயாராகி வருகின்றன எதிர்க்கட்சிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக