மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே இகத்புரியில் உள்ள மாயமான பாலிவுட் நடிகை லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்து நேற்று முன்தினம் 6 எழும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. அவை கொல்லப்பட்ட லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் பணம், சொத்து, பொறாமை, பேராசை மற்றும் லைலா கான் குடும்பம் துபாயில் செட்டிலாக முடிவு செய்தவையால் தான் லைலா கானின் தாய் ஷெலீனாவின் 3வது கணவர் பர்வேஸ் தக் அவர்களை கொலை செய்துள்ளார் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில்,
லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக ஓஷிவாராவில் உள்ள வீடு, கடை, மீரா ரோட்டில் உள்ள வீடு, இகத்புரியில் உள்ள பண்ணை வீடு, நகை மற்றும் பணத்தை சுருட்டுவதில் தான் தக் குறியாக இருந்துள்ளார். லைலா கான் குடும்பத்தார் இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்றுவி்ட்டு துபாயில் செட்டிலாக முடிவு செய்தது தக்கிற்கு பிடிக்கவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவர் துபாய்க்கு செல்ல முடியாது. மேலும் தக்கிற்கு ஷெலீனாவின் இரண்டாவது கணவர் ஆசிப் மீது லைலா அதீத நம்பிக்கை வைத்தது எரிச்சலை ஏற்படுத்தியது என்றனர்.
லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்த காவலாளியை விரட்டுவிட்டு தக் தனக்கு நம்பகமான ஷகீர் ஹுசைனை காவலாளியாக வைத்துள்ளார். அவருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக