மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி:டெல்லி: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்தது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக சிபிஐ முன்பு ஆஜராகாத முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸை கைது செய்ய ஆஜர்படுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2009-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி, மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுக்க அடிப்படை தகுதிகள் ஏதும் இல்லாத நிலையிலும் தனது பதவியை பயன்படுத்தி அங்கீகாரம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கை பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என அன்புமணிக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அன்புமணி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று ஆஜராக உத்தரவிட்டு சென்னையில் உள்ள அன்புமணி ராமதாஸ் வீட்டில் சி.பி.ஐ. சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஆனாலும் பெங்களூரில் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதால் அன்புமணியால் ஆஜராகமுடியவில்லை என்று சிபிஐயிடம் அன்புமணி வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை நிராகரித்த சிபிஐ நீதிமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தது. இதையடுத்துஅன்புமணியை 20-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக