புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் பதவியிலிருந்து, பிரணாப் முகர்ஜி
விலகி விட்டதால், மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இரண்டாவது இடம், ராணுவ
அமைச்சர் அந்தோணிக்கு வழங்கப்படலாம் என, தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும்
வகையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அந்தோணிக்கு,
பிரதமருக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை கூட்டம் நடக்கும் போது, பிரதமருக்கு அடுத்த வலது பக்க இருக்கையில் தான், முன்னர் பிரணாப் முகர்ஜி எப்போதும் அமர்வார். நேற்று, அந்த இருக்கையில் அந்தோணி அமர்ந்திருந்தார். பிரதமருக்கு அடுத்த இடதுபக்க இருக்கையில், வழக்கமான அமைச்சரவை செயலர் அஜித் சேத் அமர்வது வழக்கம். நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முன், மத்திய அரசில் நம்பர் 2 இடத்தில் பிரணாப் இருந்தார். பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், பிரணாப் டில்லியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாருக்கு, மத்திய அரசில் இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது என, கடந்த வாரம் செய்தி வெளியானது. பிரதமர் அலுவலக இணைய தளத்தில், பிரதமருக்கு அடுத்ததாக, சரத்பவாரின் பெயர் இடம் பெற்றதால், இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகம் இதை மறுத்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக