ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் மறுத்துவிட்டனர்.
புதுமுக
நடிகர் அச்சுதன் சங்கர் என்பவர் கோப்பெருந்தேவி என்ற படத்தை இயக்கி தானே
ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பெரிய நடிகைகளை நடிக்க வைக்க
நினைத்தார். இதையடுத்து த்ரிஷாவை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்க
கேட்டுள்ளார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.த்ரிஷா முதலில் ஓ.கே. சொல்லிவிட்டு பிறகு புதுமுக ஹீரோவோடா நடிக்க என்று நினைத்து மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரோயாவை கேட்டுள்ளனர்.
அவருக்கும் ரூ. 1 கோடி சம்பளமாகக் கூறப்பட்டது. ஆனால் அவரும் புதுமுக ஹீரோ அச்சுதன் சங்கருடன் நடிக்க மறுத்துவிட்டார்.
த்ரிஷாவுடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் வரிசையில் நிற்கையில் அவர் எப்படி புதுமுக நாயகனுடன் நடிக்க ஒப்புக் கொள்வார். ஸ்ரேயா கையில் படங்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் எதுக்கு ரிஸ்க் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக