காட்டு மிராண்டி ஆண் தாலிபான்கள் பெண்ணைக் கொன்றதும் ஆரவாரம்
பெண்ணை சுட்டுக் கொன்று வீடியோ வெளியிட்ட தாலிபான்கள்
காபுல்:
ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர்
முன்னிலையில் வைத்து தாலிபான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில்
உள்ள தாலிபான்கள் 3 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்
150க்கும் மேற்பட்ட ஆண்கள் பார்க்க பர்வான் மாகாணத்தைச் சேர்ந்த தாலிபான்
தீவிரவாதி முட்டிக் கால் போட்டிருக்கும் பெண் ஒருவர் அருகில் சென்று அவரது
தலையில் 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காட்சி வருகிறது. அந்த
பெண்ணைக் கொன்றதும் அங்கிருந்த ஆண்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் முஜாஹீதீன் வாழ்க என்று கோஷமிடுகி்ன்றனர்.
இந்த
வீடியோவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண்
கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அவரைக் சுட்டுக் கொன்றுள்ளனர்.இது குறித்து பர்வான் மாகாண ஆளுநர் பசீர் சலாங்கி கூறுகையில்,
இந்த
வீடியோ ஒரு வாரத்திற்கு முன்பு ஷின்வாரி மாவட்டத்தில் உள்ள கிம்சோக்
கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பாத்தவுடன் நான் எனது
கண்களை மூடிக் கொண்டேன். அந்த பெண் மீது தவறில்லை. தாலிபான்கள் மீது தான்
தவறு உள்ளது. அவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள், கொலைகாரர்கள், காட்டு
மிராண்டிகளைப் போன்று அந்த பெண்ணைக் கொன்றுள்ளனர்.தாலிபான்
கமாண்டர்கள் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தனர். அந்த இருவருக்கும்
உள்ள பிரச்சனையைத் தீர்க்க அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொல்ல முடிவு
செய்தனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக