செவ்வாய், 10 ஜூலை, 2012

Indian உபகண்டத்தில் சீனாவின் விஸ்வரூபம்

தெற்காசிய நாடுகளில் விஸ்வரூபெமடுக்கும் சீனா- செக் வைக்க தூதர்களுடன் சிவசங்கர் மேனன் தீவிர ஆலோசனை

டெல்லி: இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, தூதர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
நேபாளத்தில் 36, இலங்கையில் 12, பாகிஸ்தானில் 20, ஆப்கானிஸ்தான் 7, வக்கதேசத்தில் 9, மாலத்தீவில் 8 திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த நாடுகளில் இந்தியா மேற்கொண்டும் பணிகள் மிகக் குறைவானது. இந்த நாடுகளுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவுக்கான சீனாவின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது.
இதனால் அந்தந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அந்நாடுகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தூதர்களை வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் அழைத்துள்ளார்.
முதல் கட்டமாக நேபாளத்துக்கான தூதர் ஜெயந்த் பிரசாத், பூட்டானுக்கான தூதர் பவன் வர்மா, வங்கதேசத்தின் பங்கஜ் சரன் ஆகியோருடன் சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்த உள்ளார்

கருத்துகள் இல்லை: