டீசல் மாடலில் புதிய மேக்ஸிமோ ஹார்டு டாப் மாடல் கிடைக்கும். மேலும், இதன் 909சிசி எஞ்சின் அதிகபட்சம் 25பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது. லிட்டருக்கு 18 முதல் 20 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாருதி ஓம்னி, ஈக்கோ ஆகிய கார்களின் மார்க்கெட்டை உடைக்கும் வகையில் இந்த புதிய மினிவேனை மஹி்ந்திரா அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால், மாருதியின் ஓம்னி மற்றும் ஈக்கோ ஆகிய இரண்டும் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
மார்க்கெட்டில் டீசல் மாடல்களுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், மேக்ஸிமோ மினி வேன் டீசல் மாடலில் கிடைக்கும் என்பது கூடுதல் பலம். மேலும், இந்த யுட்டிலிட்டி வேன் மார்க்கெட்டில் புதிய மேக்ஸிமோவை வைத்து 20 முதல் 25 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறவும் மஹி்ந்திரா இலக்கு நிர்ணயித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக