கருணாநிதி சிறுதாவூரில் வைத்த பொறி! சிக்குவதற்கு நம்ம தோழர் ஏமாளியா?
Viruvirupu
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தி.மு.க. தலைவருக்கும்
இடையிலான அறிக்கைப் போர் ஓய்வதாக தெரியவில்லை. “ராமகிருஷ்ணன் வெறுப்பை
நெருப்பாகக் கொட்டுகிறார்” என்று கருணாநிதி அறிக்கை விட்டதற்கு, “தி.மு.க.
மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. நில மோசடியைத் தடுக்க வேண்டும்
என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம்” என்று கூறியிருந்தார் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.விடுவாரா கருணாநிதி. சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார்.
“2010-ம் ஆண்டே சிறுதாவூர் நில பிரச்சினை குறித்து நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கையை அளித்தார். அதற்குப் பிறகு தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டுகள் இருந்தது. அப்போது அந்த அறிக்கை மீது தி.மு.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ராமகிருஷ்ணன் கேட்டிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில், நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணை கமிஷனே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது. கமிஷன் அமைத்தவுடன், அந்த கமிஷனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றம், கமிஷனை முடக்கிப் போட்டது.
சிவசுப்ரமணியம் அறிக்கையை பேரவையிலே வைப்பதற்கே உச்ச நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்து, அனுமதி பெற்று, அதற்குப் பிறகு தான் அவையிலே அது வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தடை காரணமாகத்தான் அந்த அறிக்கையின் பரிந்துரை மீது தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுதான் உண்மை. ராமகிருஷ்ணன் இதைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
இதை பற்றியெல்லாம் தி.மு.க. மீது குறைகளைக் கூற முன்வருகின்ற ராமகிருஷ்ணன், தற்போது ஆளுங்கட்சியாக உள்ளவர்களைப் பார்த்து கேள்வி கேட்டால், அவர்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலுமே” என்பது கருணாநிதியின் ‘பொறி வைத்த’ பதில்!
இதில் என்ன பொறி உள்ளது?
1) முதல்வர் ஜெயலலிதாவின் கருணைப் பார்வை தம்மீது படாதா என்ற ஏக்கத்தில் மாக்சிஸ்ட் கட்சி, தி.மு.க. மீது எகிறுகிறது. ஜெயலலிதாவின், சிறுதாவூர் நில பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2010-ல் வலியுறுத்தியதே மாக்சிஸ்ட் கட்சிதான் என்று ஜெயலலிதாவுக்கு ஞாபகப்படுத்துகிறார் கருணாநிதி.
2) “ஜெயலலிதா தொடர்பான சிறுதாவூர் நில பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜெயலலிதா அரசிடமே கோரிக்கை வைத்துப் பாருங்களேன்” என்று ராமகிருஷ்ணனை சிக்கலில் வேறு மாட்டிவிடுகிறார்.
என்ன தோழரே… சிறுதாவூர் நில பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னதா ‘கொள்கை ரீதியாக’ ஒரு போராட்டம் நடத்திப் பார்ப்போமா?
கலைஞரிடம் ஆடையை பறிகொடுத்த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக