மதுரை ஆதீனத்துக்கு புதிதாக இரு அட்வைசர்கள்: “நித்தியை என்ன செய்யலாம்?”
Viruvirupu,
“அதோ அந்த பறவை போல..”
தேவையில்லாமல் சிக்கலை தூக்கி தலையில் போட்டுக் கொண்ட மதுரை ஆதீனம்,
நித்தியை கழட்டிவிடும் மன நிலைக்கு வந்துவிட்டார் என்கிறார்கள், உள்
விவகாரம் அறிந்தவர்கள்.
நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக்க, தமிழகத்திலுள்ள மற்றைய பீடாதிபதிகளை பகைத்துக் கொண்ட மூத்த ஆதீனம் அருணகிரிநாதர், அடுத்தடுத்து இது பீடாதிபதிகளை ஓசைப்படாமல் சந்தித்திருக்கிறார்.
இந்த இருவரில் ஒருவர், மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தி விஷயத்தில் அறிக்கை விட்டவர் என்பதே சுவாரசியம்.
“சில தேவைகளுக்காக அவரிடம் (நித்தி) போக வேண்டியதாயிற்று. இப்ப என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மதுரை மூத்தவர் மனந்திறந்து வெளிப்படையாக பேசியதால், மற்றைய தரப்பில் இருந்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.துக்கு ஆலோசனை
நித்தியை படிப்படியாக கழட்டி விடக்கூடிய ஆலோசனைகள் அவை.
“நித்திக்கு எதிராக பல கோர்ட் விவகாரங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில் பாதகமாக தீர்ப்பு வெளியான உடனே, அதைக் காரணமாக வைத்தே ஆளைக் கழட்டி விடுங்கள்” என்ற அட்வைசையே சொல்லி வைத்தால்போல இருவரும் கொடுத்திருக்கிறார்.
தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு வந்திருக்கிறார் மதுரை ஆதீனம்.
நித்தி சுவாமிகளே… watch out your cases, buddy.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக