ஜனாதிபதி ரேஸ்: சங்மா மாயாஜாலம் செய்ய… வைத்திருக்கும் ரகசியம்! ஜனாதிபதி தேர்தலில் எப்படி வெற்றி பெறுவேன் என்பது ரகசியம். அதை வெளியிட்டால் மற்றவர்கள் உஷாராகிவிடுவார்கள்
Viruvirupu,
தேர்தலில் போட்டியிடும் அனைவரும் சொல்லும் வாக்கியம்தான்,
இருந்தாலும் அதைச் சொல்லி பிரணாப் தரப்பை லேசாத பதற வைத்திருக்கிறார்
சங்மா. “ஜனாதிபதி தேர்தலில் நான்தான் வெற்றி பெறுவேன். எப்படி வெற்றி
பெறுவேன் என்பதுதான் ரகசியம்” என்பதே சங்மாவின் வாக்கியம்.மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்மா, “ஜனாதிபதி தேர்தலில் இம்முறை ஒரு மாயாஜாலம் நடக்கும். நான் வெற்றி பெறுவது உறுதி. எப்படி வெற்றி பெறுவேன் என்பது பரம ரகசியம்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, வேட்பு மனு தாக்கல் செய்தபின் நடைபெற்ற இழுபறிகளும், அது தொடர்பாக தற்போதும் அடிபடும் சில சர்ச்சைகளும் உள்ளன.
“ஜனாதிபதி வேட்பாளராவதற்கு முன், தாம் வகித்த அனைத்து பதவிகளையும் பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார்” என்கிறது காங்கிரஸ் கட்சி. சுப்ரமணியம் சுவாமி இடையே புகுந்து, “இதோ, 3 பதவிகளில் இன்னமும் நீடிக்கிறாரே” என்று கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்.
போதும், போதாதற்கு, பிரணாப் கொடுத்ததாக கூறப்படும் ஒரு கடிதத்தில் உள்ளது போலிக் கையெழுத்து என்று ஒரு சர்ச்சையும் உள்ளது.
மொத்தத்தில், பிரணாப்பை பல சிக்கல்கள் சூழ்ந்துள்ளன. ஏதோ ஒரு கட்டத்தில் சிக்கல்கள் இறுகி, அவர் போட்டியில் இருந்து விலக நேர்ந்தால், சங்மா ஜனாதிபதியாக சான்ஸ் உள்ளது.
அதனால்தான், “ஜனாதிபதி தேர்தலில் இம்முறை ஒரு மாயாஜாலம் நடக்கும்” என்ற சங்மாவின் வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
வேட்பாளர் சங்மா, “இதுவரை நான் எந்த தேர்தலிலும் தோற்றது இல்லை. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வெற்றி பெறுவேன் என்பது ரகசியம். அதை வெளியிட்டால் மற்றவர்கள் உஷாராகிவிடுவார்கள்” என்றார்.
நிஜமாகவே அவரிடம் ஏதோ ஒரு ரகசியம் உள்ளதாக டில்லி அரசியல் மட்டங்களில் ஒரு பேச்சு உலாவுவது உண்மை. எல்லாமே, சீக்கிரம் தெரிந்துவிடும்.
ஜனாதிபதி பதவி என்பது மிகவும் கௌரவமான பதவி அதை ரகசியப்பாதையில் அடைய நினைப்பதே மிகவும் கேவலமானது, எல்லாம் சேர்ந்த சேர்க்கை, சுப்ரமணியம் சுவாமி ஒரு black mail காரன் என்று ஜெயலலிதா ஒரு முறை குறிப்பிட்டு உள்ளார், இம்முறை சாமியும் ஜெயாவும் சேர்ந்து என்ன black magic கோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக