தந்தை பெரியார் குறித்து தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் நாம் உருவாக்கிய
“www.periyar.org" இணைய தளத்தினை மிகச் சிறப்பாக வடிவமைத்தவர்.
சென்னை, ஜூலை.12- தமிழ் கணினித் துறையில்
பல்வேறு குறிப்பிடத்தக்க சேவைகள் செய்திருப்பவர் ஆண்டோபீட்டர். கணித்
தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த அவர் சாப்ட்வியூ என்ற நிறுவனத்தை தொடங்கி
ஏராளமானவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து வந்தார்.சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ரமணி நகரில் வசித்து வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி.
தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது தமிழ் கணினி உலக நிபுணர்களை இவர்தான் ஒருங்கிணைத்தார். கணினித் தமிழ் மேம்பாட்டுக்கு இவர் செய்துள்ள சேவை அளவிடற்கரியது.
அவரது மறைவு கணினி தமிழ் ஆய்வாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டோ பீட்டர் உடல் அடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கொளத்தூரில் நடைபெற உள்ளது.
கூடுதல் தகவல்கள்:
* இன உணர்வாளர்
* இதழியல் உலகில் தமிழர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்
* 2012-ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் தமிழர் தலைவர் அவர்களால் “பெரியார் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்.
* ஆண்டுதோறும் பெரியார் திடலில் நடைபெறும் இதழாளர் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று வகுப்புகளை நடத்துபவர்.
* தந்தை பெரியார் குறித்து தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் நாம் உருவாக்கிய “www.periyar.org" இணைய தளத்தினை மிகச் சிறப்பாக வடிவமைத்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக