இது தொடர்பாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ மேலும் தெரிவித்திருப்பதாவது;
பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சிறுவர்களை படையணிக்கு ஆட்திரட்டும் நாடுகளை தனது அறிக்கையின் இணைப்புகளில் ஐ.நா. நிபுணர் ராதிகா குமாரசாமி உள்ளடக்கக்கூடியதாக இருக்குமா என்பதே இந்த விடயமாகும். உதாரணமாக இதுவரை இலங்கையானது இணைப்பு I I இல் உள்ளது. மியன்மாரும் அவ்வாறே இருக்கின்றது.
பாகிஸ்தானிலுள்ள குழுக்கள் கிரமமான முறையில் சிறுவர்களை படையணிக்கு திரட்டிவந்ததாக அச்சமயம் ஐ.நா. தூதுவராக இருந்த ஜேன் மொரீஸ் ரைபேர்ட் ஊடகங்களுக்குக் கூறியிருந்த நிலையில் பாகிஸ்தான் நிறுத்தப்பட்டிருந்தது. போதை வஸ்துக் குழுக்களால் சிறுவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள மெக்ஸிக்கோவை உள்ளடக்குவதற்கான சாத்தியத்தை சம்பந்தப்படுத்தும் சர்ச்சைகளும் உள்ளன.
ஐ.நா.வில் ராதிகா குமாரசாமி கடைசியாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மெக்ஸிக்கோ பற்றி இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் கேட்டது. ஏன் அதனை உள்டக்கியிருக்கவில்லை என்றும் கேட்டது. சிறுவர் மற்றும் வன்செயல் விவகாரங்களுக்கான தூதுவரை அவர் சுட்டிக்காட்டியதுடன் மெக்ஸிக்கோ விவகாரம் கையாளப்படும் என்று கூறியிருந்தார். பாகிஸ்தானும் கையாளப்படும் என்று தோன்றியது.
பாகிஸ்தான், மெக்ஸிக்கோவை ராதிகா குமாரசாமி உள்ளடக்காதமை விளங்கப்படுத்துவதற்கு சாத்தியமற்றதாகவோ அல்லது குறைந்தளவிலாவது தனிப்பட்ட தெரிவாகவோ இருந்தாலும் அவர் இப்போதும் விசனத்திற்கு உள்ளாகியுள்ளார். மியன்மாரை உள்ளடக்குவதை நிறுத்துவது தொடர்பாக அவர் விசனத்திற்கு இப்போதும் உள்ளாகியிருக்கிறார். பட்டியலிலிருந்து நீக்கப்படுவதற்கு மியான்மாருக்கு இந்தியா உதவ விரும்பியிருக்கக்கூடும் என்று மாற்றுக்கருத்துக்கொண்டோர். ஆச்சரியப்படக்கூடும். பாகிஸ்தானை பட்டியலில் சேர்ப்பதற்கு குமாரசாமிக்கு இந்தியா ஆதரவை வழங்கியிருந்திருக்கக்கூடும் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியில் உள்ள தார்மிகத்தன்மையானது எந்தவொரு அச்சமோ அல்லது சாதகமாக நோக்கும் தன்மையோ இல்லாமல் பாகிஸ்தான், மெக்ஸிக்கோ, மியன்மாரை பட்டியலில் சேர்ப்பதாகும். அல்லது ஒன்றையுமே சேர்க்காமல் விடுவதாகும் என்று இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக