டெல்லி: லோக்சபா தேர்தலை நாங்கள் சந்திப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டுள்ள கடைசி பெரிய அமைச்சரவை மாற்றம் இது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இதுதான் லோக்சபா தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கடைசி பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றமாக இருக்கும் என நம்புகிறேன்.
மாநில பிரதிநிதித்துவம், திறமை ஆகியவற்றுக்கு சம அளவிலான வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
திமுகவுக்காக 2 இடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் தங்களது முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர். [ கருத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக