வெள்ளி, 15 ஜூலை, 2011

sai samadhi open சாய்பாபா மகாசமாதி திறப்பு: குவியும் பக்தர்கள்



புட்டபர்த்தி: பிரஷாந்தி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சத்யசாய் பாபாவின் மகாசமாதி பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. பாபாவின் சமாதியைப் பார்க்க பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஸ்ரீ சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி உயிர் இழந்தார். அவரது ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மகாசமாதி கட்டப்பட்டுள்ளது.

சாய்பாபா உயிரோடு இருக்கையில் ஒவ்வொரு குருபூர்ணிமா தினத்தன்றும் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அதனால் பாபாவின் மகாசமாதி குருபூர்ணிமா தினமான இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

பாபாவின் சமாதியை தரிசிக்க பெருந்திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது சமாதி அருகே ஒரு பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாம்பு சிறிது நேரத்தில் தானாகவே சென்றுவிட்டது.

முன்னதாக சாய்பாபா இறந்த அன்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சபாயாவின் வீட்டுக்கும் ஒரு பாம்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபாவின் சமாதி திறக்கப்பட்டதில் இருந்தே அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா சாய்பாபா பற்றி ஒரு படம் எடுக்கிறார். அவர் இன்று புட்டபர்த்தியில் படபிடிப்பைத் துவங்குகிறார்.

கருத்துகள் இல்லை: