வெள்ளி, 15 ஜூலை, 2011

ஹோம் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுகோள்

புதுமுகங்கள் நடிக்கும் `ஒரு சொல்' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில், சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன் பேசும்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து சில கோரிக்கைகளை படித்தார். அந்த கோரிக்கைகள் வருமாறு:
கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கி, ஏழை-எளியவர்களுக்கு உதவியும், தனியார் ஆதிக்கத்தை ஒழித்தும், திரைப்படங்களை கள்ளத்தனமாக வெளியிடும் அடித்தனத்தை தகர்த்தெறிந்ததற்காக, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பந்தாவான பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று மறுத்து, வீண் ஆடம்பரங்கள், வெட்டி செலவுகள், கால விரயம் தேவையில்லை...அவரவர் தொழிலை செம்மையாக செய்யுங்கள் என்று அறிவுறுத்திய `அம்மா'வுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
கடந்த ஒருமாத காலமாக திரையிட்ட படங்களுக்கு வரிச்சலுகை சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை இருப்பதால், `சுயதொழில்' போல் ஹோம் தியேட்டர்களை நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் அமைக்க அனுமதி தந்து, சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று& பேசினார்.

கருத்துகள் இல்லை: